பள்ளிவாசல்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்கள் - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சுற்று நிருபம் - News View

Breaking

Saturday, October 2, 2021

பள்ளிவாசல்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்கள் - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சுற்று நிருபம்

மதஸ்தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, இலங்கை வக்பு சபையினால் பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தில் ஒக்டோபர் 15 வரை குறிப்பிடப்பட்டுள்ள இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு அமைய குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளிவாசல்களில்‌ தனிமையாக தொழுவதற்கு, சக்தி எந்த நேரத்திலும்‌ அதிகபட்சம்‌ 25 நபர்களை மாத்திரமே அனுமதிக்க வேண்‌டும்.

அனைந்து பள்ளிவாசல்களிலும்‌ ஐவேளை ஜமாஅத் தொழுகை,‌ ஜும்ஆத் தொழுகை, ஜனாஸாத்‌ தொழுகை, அல்குர்‌ஆன்‌ மற்றும்‌ நிகாஹ்‌ மஜ்லிஸ்‌ உட்பட ஏனைய அனைத்து கூட்டு செயற்பாடுகளுக்கும்‌ அனுமதி இல்லை.

சுகாதார / பாதுகாப்பு தரப்பினரின்‌ ஏனைய அனைத்து விதிமுறைகள்‌ மற்றும்‌ வக்பு சபையின்‌ முன்னைய வழிகாட்டுதல்கள்‌ மிகவும்‌ கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படல்‌ வேண்டும்‌.

அதன்‌ பிரகாரம்‌, முகக்கவசம்‌ அணிதல்‌, 1 மீற்றர்‌ இடைவெளியினை பேணுதல்‌, சொந்தமான தொழுகை விரிப்பினை கொண்டு வருதல்‌ மற்றும்‌ வீட்டிலிருந்தே வுழுவுடன் பள்ளிவாசலுக்கு சமுகமளித்தல்‌ என்பன கட்டாயமானதாகும்‌.

பள்ளிவாசல்களில்‌ உள்ள வுழுச்‌ செய்யும்‌ பகுதி மற்றும்‌ கழிப்பறைகள்‌ என்பன மூடப்பட்டிருத்தல்‌ வேண்டும்‌.

தனிமைப்படுத்தப்பட்டதாக அல்லது, மட்டுபடுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள்‌ மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும்‌ மூடப்பட்டிருத்தல்‌ வேண்டும்‌.

No comments:

Post a Comment