மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் - News View

Breaking

Wednesday, October 13, 2021

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஏ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மன்மோகன் சிங்கிற்கு தற்போது 89 வயது. தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், இந்தியா முழுவதும் அவரின் ஆரோக்கியத்திற்காகவும், விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் உடல்நிலை தொடர்பாக பரவிய வதந்தி “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை தொடர்பாக பல வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு தகவல்கள் தேவைப்பட்டால் தொடர்ந்து பகிருவோம்,” என காங்கிரஸ் கட்சியின் செயலர் பிரனாவ் ஜா தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஏப்ரல் மாதம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

No comments:

Post a Comment