நாட்டு மக்கள் அன்று பாணுக்கு வரிசையில் இன்று பால்மாவுக்கு வரிசையில் - இராதகிருஸ்னண் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 10, 2021

நாட்டு மக்கள் அன்று பாணுக்கு வரிசையில் இன்று பால்மாவுக்கு வரிசையில் - இராதகிருஸ்னண்

சினிமோவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலப்பகுதியில் பாணுக்கு வரிசையில் நின்ற நாட்டு மக்கள் இன்று 40 வருடத்திற்கு பிறகு பால்மாவிற்கும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதகிருஸ்னண் தெரிவித்துள்ளார்.

நேற்று (09) மாலை ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்னண், இந்த அரசாங்கம் பல கபலிகரமான விடயங்களை செய்து வருகிறது முதலில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது உதாரனமாக எரிவாயு, பால்மா, கோதுமை மா போன்ற பொருட்களுக்கு தட்டுபாட்டை ஏற்படுத்தி சந்தையில் அதனை இல்லாது போல் செய்து அந்த நிருவனங்களின் ஊடாக குறித்த பொருட்களை அதிக விலைக்கு விற்க கூடிய சூழ்நிலையினை உருவாக்கியுள்ளது.

மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர விலை அதிகரிப்பை பற்றி சிந்திப்பதில்லை சில பொருட்களுக்கு கட்டுபாட்டு விலை இல்லை என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது

இன்று அரிசிக்கு கட்பாட்டு விலை கிடையாது, எரிவாயிக்கு கட்டுபாட்டு விலை கிடையாது. பால் மாவுக்கு கட்டுபாட்டு விலை கிடையாது, அரசாங்கம் அவர்களுக்கு கீழ் செயற்படுகின்ற சூழ்நிலையே காணப்படுகிறது. 

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரியாமல் இருக்கிறார்கள் பணம் இருந்தாலும் இல்லா விட்டாலும் மக்கள் மோசமான நிலையில் வாழ்கிறார்கள் இன்று அனைத்து பொருட்களின் விலையும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

அனைத்து பொருட்களையும் இந்த அரசாங்கம் கொண்டு வர நினைத்தாலும் அரசாங்கத்திடம் டொலர்கள் இல்லை டொலர் இல்லா விட்டால் மீண்டும் பால் மா, கேஸ், சீமெந்து ஆகிய விலைகள் அதிகரிக்கும், வாழ்க்கை செலவு இனி குறையாது இதற்கு கடவுளை நம்பவும் முடியாது அன்று ஐந்து ரூபாவுக்கு ஒரு ராத்தல் பானை கொள்வனவு செய்த காலத்தை மீண்டும் திரும்பி பார்க்க முடியாது.

நாட்டில் உரத்திற்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தேயிலைக்கு கூட போதுமான உரம் கிடைப்பதில்லை இவ்வாறு சென்றால் தேயிலை துறையும் விழ்ச்சியடையும் பெருந்தோட்ட நிருவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்காது. 

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் வாசுதேவ நானயகாரவும் வீதிக்கு இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதாக கூறியிருக்கிறார் அவ்வாறு இறங்கினால் நாங்களும் அவருக்கு நிச்சயமாக ஆதரவினை வழங்குவோம். 

மாகாண சபை தேர்தல் பழைய முறையில் நடாத்தப்பட வேண்டமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார். நாட்டில் இருக்கின்ற இனப் பிரச்சினை மற்றும் 13 வது திருத்தத்தை வழுபடுத்தவும் இந்த மாகாண சபை தேர்தல் முக்கியமானதாகும். இதில் இந்தியாவின் அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகும் என குறிப்பிட்டார்

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment