எரிபொருள் விலையை கூட்டியே ஆக வேண்டும் : நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்கிறார் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் - News View

About Us

About Us

Breaking

Monday, October 11, 2021

எரிபொருள் விலையை கூட்டியே ஆக வேண்டும் : நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்கிறார் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர்

(ஆர்.யசி)

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து இலங்கையால் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியுடன் மொத்தமாக 70 பில்லியன் ரூபா நட்டத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இயங்கிக் கொண்டுள்ளது. எனவே இவ்வாறான நிலையில் எமக்கு இருக்கும் ஒரே வழிமுறை எரிபொருள் விலையை கூட்டுவதாகவும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் கூறுகையில்,

தற்போதைய நிலைமையில் பெற்றோலுக்கு ஒரு லீட்டர் 14 ரூபா 56 சதத்தினாலும், டீசலுக்கு ஒரு லீட்டர் 31 ரூபா 46 சதத்தினாலும் நட்டத்தை எதிர்கொண்டு வருகின்றோம். ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியுடன் மொத்தமாக 70 பில்லியன் ரூபா நட்டத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இயங்கிக் கொண்டுள்ளது.

எனவே இவ்வாறான நிலையில் எமக்கு இருக்கும் ஒரே வழிமுறை எரிபொருள் விலையை கூட்டுவதாகவும். எனவே விலையை கூட்டியே ஆக வேண்டும் என்பதை நாம் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகின்றோம்.

அரசாங்கம் இந்த விடயம் குறித்தும் கவனம் செலுத்தியாக வேண்டும். வலுசக்தி அமைச்சருடனான பேச்சுவார்த்தைகளின் போதும் இந்த காரணிகளை நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment