யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் : சகல தகவல்களையும் சேவைகளையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 20, 2021

யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் : சகல தகவல்களையும் சேவைகளையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும்

யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்றைய தினம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் இணையத்தளமானது யாழ் மாநகர முதல்வர் மாநகர ஆணையாளரினால் உத்தியோகபூர்வமாக அங்குராரபணம் செய்து வைக்கப்பட்டது.

இணையத்தள அங்குராரபண நிகழ்வில் யாழ் மாநகர சபை உத்தியோகத்தர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள யாழ் மாநகர சபையின் இணையத்தளத்தில் யாழ் மாநர சபை தொடர்பான சகல தகவல்களையும் சேவைகளையும் பொதுமக்கள் இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

யாழ் மாநகர சபையின் செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் கணணி மயப்படுதப்படும் என யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்தார்.

இன்று யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பணம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே யாழ் மாநகர முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது நாம் கணணி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அந்த வகையிலேயே யாழ் மாநகர சபையின் செயற்பாடுகளை முற்றுமுழுதாக இணைய வழி மூல கணனி மயப்படுத்தப்பட்ட வேண்டும் என்பது என்னுடைய இலக்கு அந்த இலக்கை நோக்கிய பயணத்தின் மிக காத்திரமான பணியின் ஒரு பகுதியை இன்று நாங்கள் அடைந்துள்ளோம்.

அத்துடன் எதிர்காலத்தில் யாழ் மாநகர சபையின் செயற்பாடுகள் அனைத்தும் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டு இணையத்தின் ஊடாக பொதுமக்கள் தமது சேவையினை வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்ளக் கூடியவாறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அதற்குரிய வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இணையத்தளமானது பொதுமக்கள் தமக்குரிய சேவையினை வீடுகளில் இருந்தவாறே இணையத்தினூடாக தமக்குரிய முழுமையான சேவைகளைப் பெறக்கூடியவராகவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே தமது பதவிக் காலம் விரைவில் முடிந்து விட்டாலும் எதிர்வரும் காலத்தில் இந்த மாநகர சபையினை பொறுப்பேற்கும் நிர்வாகமானது முழுமையாக இணைய மயமாக்கப்பட்ட மாநகர சபையாக பொறுப்பேற்கும் எனவும் தெரிவித்தார்.

யாழி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான கஜமுகன் இந்த இணையத்தளத்தினை இலவசமாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார். 

இந்த இணையத்தளத்தின் முகவரி http://jaffna.mc.gov.lk

No comments:

Post a Comment