கொத்மலை ஓயாவில் நீராடச் சென்ற இளைஞன் மாயம் - மூன்றாவது நாளாக தொடரும் தேடுதல் - News View

About Us

About Us

Breaking

Monday, October 4, 2021

கொத்மலை ஓயாவில் நீராடச் சென்ற இளைஞன் மாயம் - மூன்றாவது நாளாக தொடரும் தேடுதல்

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா வெவஹேன பிரதேசத்தில் கொத்மலை ஓயாவில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 பேர் கொண்ட தனது நண்பர்களுடன் வெவஹேன பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இதன்போது கால் தவறி குறித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனவர் பூண்டுலோயா கும்பாலொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 34 வயதுடைய இலங்க சஞ்சீவ என தெரியவந்துள்ளது.

நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடி பூண்டுலோயா பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், நுவரெலியா இராணுவத்தினரும், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மூன்றாவது நாளாக இன்றும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment