பெருந்தோட்ட நிர்வாகிகளை பாதுகாக்க இராணுவமா? : அனுமதிக்க முடியாது என்கிறார் சதாசிவம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 11, 2021

பெருந்தோட்ட நிர்வாகிகளை பாதுகாக்க இராணுவமா? : அனுமதிக்க முடியாது என்கிறார் சதாசிவம்

பெருந்தோட்ட நிர்வாகிளை பாதுகாப்பதற்காக இராணுவத்தினரை பெருந்தோட்ட பகுதிகளுக்கு அழைப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. தோட்ட நிர்வாகிகள் பாதுகாப்புக்காக இராணுவ பாதுகாப்பு கேட்டு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.

அவர் இவ்விடயம் தொடர்பாக பெருந்தோட்ட கம்பனி நிவாகிகளின் நிரைவேற்றும் அதிகாரியும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளருமான ரொசான் ராஜதுரைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

இந்த கடிதத்தின் பிரதிகளை தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பத்திரனவிற்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அனுப்பியுள்ளார்.

சதாசிவம் அக்கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு தொழிற்சங்க ரீதியில் பேச முடியாமல் கொத்தடிமைகளாக இருக்கும் தொழிலாளர்களை மேலும் பயமுறுத்தி அடிமைகளாக்க தோட்ட நிவாகிகளின் பாதுகாப்பிற்காக இராணுவத்தை கொண்டு வருவதற்கு தோட்ட நிர்வாகள் முயற்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

தலவாக்கலை பகுதியில் தொழிலாளர்களும் நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட சம்பவத்தை காரணம்காட்டி பெருந்தோட்ட நிர்வாகிகளுக்கு பாதுகாப்பிற்காக இராணுவ பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதிய தோட்ட நிர்வாகி உடனடியாக அக்கடிதத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து தொழிற்சங்க போராட்டம் நடத்த வேண்டிவரும் சூழ்நிலை ஏற்படும். 

எனவே பெருந்தோட்டங்களுக்கு இராணுவத்தினரை கொண்டுவரும் நடவடிக்கையை தோட்ட நிர்வாகங்கள் கைவிட வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலை குறூப் நிருபர்

No comments:

Post a Comment