தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை : புலம்பெயர் தமிழர்களுடனேயே பேசுவோம் - அரசின் அறிவிப்பை வெளியிட்ட ஜீ.எல் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 17, 2021

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை : புலம்பெயர் தமிழர்களுடனேயே பேசுவோம் - அரசின் அறிவிப்பை வெளியிட்ட ஜீ.எல்

உலக தமிழர் பேரவை போன்ற தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மேலும் நல்லிணக்க செயன்முறையின் ஒரு பகுதியாக அரசு சார்பற்ற அமைப்புக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் உறுப்பினர்களுடன் கலந்துரையாட தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் தேசிய கவுன்சில், தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகியன தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment