அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்பாமல் இந்த வருட இறுதிக்குள் அந்த அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அது தொடர்பான பணிப்புரைகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் விடுத்துள்ளார்.
நகர அபிவிருத்தி உள்ளிட்ட அமைச்சுக்களின் அபிவிருத்தித் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையில் இடம் பெற்றுள்ளது. அதன் போதே பிரதமர் மேற்படி பணிப்புரையை விடுத்துள்ளார்.
அதன் போது கருத்து தெரிவித்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ஸ்ரீ நிமல் பெரேரா, மேற்படி அமைச்சின் கீழ் கடந்த ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் சாத்தியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment