ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேயை பதவிலியிருந்து நீக்குமாறு எவ்விதமான கடிதங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கவில்லை என்று அதன் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
டயனா கமகேயை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரிடத்தில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தி குறித்த உறுப்பினரை நீக்குமாறு கோரி எமக்கு கடிதம் அனுப்பியதாக ஊடகங்கள் வாயிலாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிந்து கொண்டது.
ஆனால் வெள்ளிக்கிழமை மாலை வரையில் அவ்விதமான எந்தவொரு கடிதமும் எமக்கு கிடைத்திருக்கவில்லை என்றார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்பில் இவ்வியடம் தொடர்பில் வினவியபோதும் அவர்களிடத்திலிருந்து தெளிவானதொரு பதில் கிடைக்கவில்லை.
அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரை செய்தி அச்சுக்கு செல்லும் வரையில் தொடர்பு கொள்ள முடிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேசரி
No comments:
Post a Comment