முஹம்மது நபியின் கார்ட்டூனை வரைந்தவர் விபத்தில் மரணம் - News View

Breaking

Sunday, October 3, 2021

முஹம்மது நபியின் கார்ட்டூனை வரைந்தவர் விபத்தில் மரணம்

முஹம்மது நபி கார்ட்டூனை வரைந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லார்ஸ் வில்க்ஸ் வீதி விபத்தில் மரணமடைந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காவல்துறை வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்ததாகத் தெரிய வந்திருக்கிறது. இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு காவலர்களும் உயிரிழந்தனர்.

இதில் சதி ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஏதும் உறுதி செய்யப்படவில்லை.

டென்மார்க் செய்தித்தாள் முஹம்மது நபியின் கார்ட்டூன்களை வெளியிட்ட அடுத்த ஆண்டில், வில்க்ஸ் கார்ட்டூன் வரைந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததால், காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

2007ஆம் ஆண்டில் இந்த கார்ட்டூன் வரையப்பட்டபோது உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment