பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Monday, October 4, 2021

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இன்று (04) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர், ஜீ.எல். பீரிஸ் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, இந்திய பிரமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்த்துக்களை அவர் பிரதமருக்கு தெரிவித்திருந்தார்.

இச்சந்திப்பின்போது இரு தரப்பிடையேயான தற்போது இடம்பெற்று வரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நேற்று முன்தினம் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர், நேற்று ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டதைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

குறிப்பாக நேற்யைதினம் (03) அவர் திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை பார்வையிட்டிருந்ததோடு, யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவையும் அவர் சந்திக்கவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment