யாழில் விசேட தேவையுடையோர், நாட்பட்ட நோயுடையோருக்கு தடுப்பூசி - தவற விட வேண்டாம் என்கிறார் குழந்தை மகப்பேற்று வைத்திய நிபுணர் அருண் மொழி - News View

Breaking

Friday, October 1, 2021

யாழில் விசேட தேவையுடையோர், நாட்பட்ட நோயுடையோருக்கு தடுப்பூசி - தவற விட வேண்டாம் என்கிறார் குழந்தை மகப்பேற்று வைத்திய நிபுணர் அருண் மொழி

12-19 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கலை விசேட தேவையுடையோர் மற்றும் நாட்பட்ட நோய் உடையோர் தவற விடாது பெற்றுக் கொள்ளுங்கள் என குழந்தை மகப்பேற்று வைத்திய நிபுணர் கே.அருண்மொழி தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்தட்டத்தினை ஆரம்பித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட நாட்பட்ட நோய் மற்றும் விசேட தேவையுடையோருக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையானது இன்று முதலாம் திகதி தொடக்கம் ஒரு வாரத்திற்கு யாழ். போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே இது சம்பந்தமான விடயங்களை பத்திரிகைகள் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் மக்களுக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் நான்கு வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமானது நடைபெறுகின்றது.

தெல்லிப்பளை, பருத்தித்துறை ஊர்காவற்துறை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகிய இடங்களில் தடுப்பூசி வழங்கும் திட்டமானது ஆரம்பமாகி நடைபெறுகின்றது. யாழ். போதனா வைத்தியசாலை விடுதி 05 இல் இதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தை மக்கள் தவற விடாது கொரோனா நோய்க்குரிய தடுப்பூசியை விசேட தேவையுடையோர் மற்றும் நாட்பட்ட நோய் உடையோர் 12தொடக்கம் 19 வயதுக்குட்பட்டோர் அனைவரும் இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாமல் தங்களுடைய பிள்ளைகளை கூட்டிவந்து பாதுகாப்பான முறையில் தடுப்பூசியில் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

No comments:

Post a Comment