பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு - News View

Breaking

Monday, October 11, 2021

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு

2021ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு டேவிட் கார்ட் (David Card), ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் (Joshua D Angrist), கியூடோ இம்பென்ஸ் (Guido W Imbens) ஆகிய மூன்று அமெரிக்க பொருளாதார வல்லுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் பொருளாதாரத்துக்காக டேவிட் கார்டு ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்கு விருது வழங்கப்படுகிறது.

Analysis of Causal Relationships-க்கு அளித்த முறையான பங்களிப்புக்கு ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் மற்றும் கியூடோ இம்பென்ஸ் ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிரிந்து அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment