அமைதிக்கான நோபல் பரிசு இரு ஊடகவியலாளருக்கு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 8, 2021

அமைதிக்கான நோபல் பரிசு இரு ஊடகவியலாளருக்கு அறிவிப்பு

அமைதிக்கான நோபல் பரிசு, ஊடகவியலாளர்களான திமித்ரி மொரொட்டா (Dmitry Muratov), மரியா ரிசா (Maria Ressa) ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல், இலக்கியம், சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த வருடத்திற்கான நோபல் பரிசுகள் கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதியிலிருந்து அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல் பிரிவில் நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கும், இரசாயனவியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கும், பௌதிகவியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

நேற்று (07) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தன்சானியா நாட்டைச் சேர்ந்த அப்துல் ரசாக்குக்கு அவருடைய வாழ்வுக்குப் பிறகு (after lives) நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. சமரசமில்லாமல் காலணித்துவத்தின் விளைவுகள், வளைகுடா பகுதிகளின் அகதிகளின் தலைவிதிகள் போன்ற உணர்வுகளை உள்ளடக்கிய ஒன்றாகும்.

இன்று சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களான திமித்ரி மொரொட்டா, மரியா ரிசா ஆகிய இருவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதாக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட மரியா ரிசா தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸில் அதிகார துஷ்பிரயோகம், வன்முறை பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு கருத்து சுதந்திரத்தை பத்திரிகையின் மூலம் பயன்படுத்தியவர்.புலனாய்வு இதழியலுக்கான டிஜிட்டல் மீடியா நிறுவனம் மூலம் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment