சீனாவின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்குத் தடை - News View

About Us

About Us

Breaking

Saturday, October 2, 2021

சீனாவின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்குத் தடை

சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், சீனாவைச் சேர்ந்த பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று அனைத்துலக ஒலிம்பிக் குழு அறிவித்தது.

​டோக்கியோ விளையாட்டுகளிலும், பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டாளர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தவறினால், பீஜிங் (Beijing) சென்றவுடன் அவர்கள் 3 வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விளையாட்டுகளில் பங்கேற்கும் அனைவரும், செல்லக்கூடிய இடங்களும், போக்கு வரத்து முறைகளும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்தகைய நடவடிக்கைகள் மூலம், ஒலிம்பிக் விளையாட்டுகளில் கிருமிப்பரவல் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

எதிர்வரும் பெப்ரவரி 04 இலிருந்து 20 ஆம் திகதி வரை பீஜிங் (Beijing) குளிர்கால விளையாட்டுகள் நடைபெறும்.

No comments:

Post a Comment