பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம் - News View

Breaking

Saturday, October 2, 2021

பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்

(எம்.மனோசித்ரா)

பால்மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிப்பதற்கு எம்மால் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மற்றும் வாழ்க்கை செலவு கூட்டத்தில் 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் 200 ரூபா அதிகரிப்பின் மூலம் எமக்கு இலாபம் இல்லை என்று பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வருடத்திற்கு 80,000 தொன் பால்மா இறக்குமதி செய்யப்படுகிறது. எம்மால் இறக்குமதி செய்யப்பட்ட 3 இலட்சம் தொன் பால்மா துறைமுகத்திலிருந்து விடுவிக்க முடியாமல் தேங்கியுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட பால்மா கிலோ எம்மால் 820 ரூபாவிற்கு வர்த்தகர்களுக்கு வழங்கப்படுகிறது. நுகர்வோருக்கு 945 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாட்டினை நிவர்த்த செய்வதற்கு பால்மா இறக்குமதி செய்யப்பட வேண்டும்.

ஏற்கனவே இறக்குமதி செய்த பால்மாவிற்கான முழுத் தொகையையும் செலுத்தி முடிக்கும் வரை தற்போது புதிதாக விடுக்கப்படும் கோரிக்கைக்கு எமக்கு பால்மா வழங்கப்பட மாட்டாது என்றார்.

No comments:

Post a Comment