விசாரணையில் இருந்து தப்பிக்க முயன்ற நாஜி செயலாளர் கைது - News View

Breaking

Saturday, October 2, 2021

விசாரணையில் இருந்து தப்பிக்க முயன்ற நாஜி செயலாளர் கைது

வடக்கு ஜெர்மனியில் நாஜி வதை முகாம் ஒன்றின் செயலாளராக இருந்த பெண் ஒருவர் தம் மீதான வழக்கு விசாரணைக்கு முன்னதாக தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

11,000 கொலைகளுக்கு உடைந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் 96 வயதான இர்ம்கார்ட் புர்ச்னர் என்ற அந்தப் பெண் வழக்கில் ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்வதற்கு நீதிபதி பிடியாணை பிறப்பித்துள்ளார்.

குவிக்போர்ன் பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றிருக்கும் அந்தப் பெண்; சில மணி நேரங்களின் பின் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

ஹம்பேர்க் நகருக்கு தப்பிச் செல்ல முயன்றிருக்கும் அவர் உள்ளூர் வீதி ஒன்றில் வைத்தே கடந்த வியாழனன்று பிடிபட்டார்.

அவர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படுவதை ஒட்டி அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய போலந்து நகரான கிடன்ஸ்கில் உள்ள நாஜி வதை முகாமிலேயே அவர் பணியாற்றியுள்ளார். இங்கு சுமார் 100,000 பேர் மோசமான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு 65,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment