தரைப்படை, விமானப்படை, காவல்த்துறை இணைந்து நடத்திய கூட்டு ஆபரேஷனில் கொலம்பியாவில் அதிதீவிரமாகத் தேடப்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல்காரர் மற்றும் அந்நாட்டின் மிகப் பெரிய சட்டவிரோத செயல்களைச் செய்யும் குழுவின் தலைவன் டைரோ ஆன்டோனியோ உசுகா சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
டைரோ, வட மேற்கு கொலம்பியாவில் பனாமா நாட்டு எல்லையில் உள்ள ஆன்டியோகுயா மாகாணத்தில் அவரது பதுங்கிடத்தில் இருந்த போது பிடிபட்டார்.
இந்த ஆபரேஷன் தொடர்பான கூடுதல் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இந்த மாபெரும் ஆபரேஷனில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார்.
50 வயதான டைரோவைப் பிடிக்க இதுவரை ஆயிரக்கணக்கான அதிகாரிகளைக் கொண்டு பல ஆபரேஷன்கள் நடத்தப்பட்டன. ஆனால் இப்போதுதான் சிக்கியுள்ளார்.
டைரோவை கொலம்பியாவின் ஆயுதமேந்திய படையினர் சூழ, கையில் விளங்கிட்டு பாதுகாப்பாக அழைத்து வருவது போன்ற படத்தை வெளியிட்டுள்ளனர்.
இவரைப் பற்றி தகவல் கொடுப்போருக்கு எட்டு லட்சம் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை கொடுப்பதாக அரசு அறிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவோ இவர் தலைக்கு ஐந்து மில்லியன் டொலரை பரிசுத் தொகையாக அறிவித்திருந்தது.
டைரோ கைது செய்யப்பட்டது குறித்து கொலம்பியாவின் ஜனாதிபதி இவான் டுகேவே தொலைக்காட்சியில் ஒரு காணொளி செய்தியில் தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment