பால் மாக்களின் விலைகள் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 9, 2021

பால் மாக்களின் விலைகள் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களின் விலைகளை இன்று (09) முதல் அதிகரிக்க, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் மற்றும் உச்சபட்ச சில்லறை விலைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வரத்தமானிகளிலிருந்து அவற்றை அரசாங்கம் நீக்கியதைத் தொடர்ந்து பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

குறிப்பாக குழந்தைகளுக்கான பால் மா, முழு ஆடைப் பால் மா, கொழுப்பு நீக்கப்பட்ட பால் மா ஆகிய அனைத்து வகை பால் மாக்களும் குறித்த கட்டுப்பாட்டு விலைகள்/ நியமப் பொருட்கள் / றிப்பிட்ட பொருட்கள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,

1 கி.கி. பால் மா : ரூ. 250 இனால் அதிகரிப்பு - புதிய விலை ரூ. 1,195
400 கி. பால் மா : ரூ. 100 இனால் அதிகரிப்பு - புதிய விலை ரூ. 480

என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

விலை அதிகரிப்பிற்கு முன்னர் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 945 ரூபாவாகவும், 400 கிராம் பால் மாவின் விலை 380 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வியாழனன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போது பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பொருட்களுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

குறித்த பொருட்களுக்கு சந்தையில் ஏற்பட்ட தட்டுப்பாடே இந்த தீர்மானத்திற்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment