அச்சுறுத்தல் விடுக்காது, அன்புடன் ஆசிரியர்களை சேவைக்கு அழைப்போம் - தேசப்பிரேமி ஐக்கிய தேசியக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

அச்சுறுத்தல் விடுக்காது, அன்புடன் ஆசிரியர்களை சேவைக்கு அழைப்போம் - தேசப்பிரேமி ஐக்கிய தேசியக் கட்சி

அச்சுறுத்தல் அடக்குமுறை மூலமாக ஆசிரியர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஒரு சிலர் கூறும் பொறுப்பற்ற கூற்றுக்களை தேசப்பிரேமி ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 24 வருடங்களாக தீர்க்கப்படாத ஆசிரிய, அதிபர்கள் சம்பள உயர்வு கோரிக்கை தீர்க்கப்பட வேண்டுமென்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் தற்போதைய பொருளாதார நிலைமையில் சம்பள உயர்வை ஒரே முறையில் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் தவிர்த்து வந்த இந்த சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முன்வைத்த யோசனையே பெற்றுக் கொடுக்க கூடிய மிக சிறந்த தீர்வு என நாம் ஏற்றுக் கொள்கிறோம்..

100 நாட்களை அண்மித்ததாக நடைபெற்ற போராட்டங்களில் கண்ணீர்ப்புகை, தடியடி, நீர் பிரவாகம் போன்ற எந்த ஒரு அடக்கு முறையும் மேற்கொள்ளப்படவில்லை. இலங்கை சமூகத்தின் கௌரவத்திற்கு பாத்திரமான ஆசிரிய, அதிபர் கௌரவத்தைப் பாதிக்கும் எந்த சம்பவமும் கடந்த காலங்களில் நடைபெறவில்லை என்பதையும் ஞாபகப்படுத்த வேண்டும்.

தனிமைப்படுத்தல் சட்டம், நீதிமன்ற உத்தரவு என்பவற்றை கருத்திற் கொள்ளாது கொவிட் தொற்றை இரண்டு மூன்று மடங்காக்கிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்னே அரசாங்கம் பொறுமையுடன் செயல்பட்டமை குறித்து பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையேயான விரோத மனப்பான்மையை எமது பாடசாலை தொகுதி மற்றும் கல்வித் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை குறிப்பிட வேண்டும். 

அவர்களிடையே காணப்படும் புரிந்துணர்வு பாதிக்கப்பட்டு ஒவ்வொருவரும் தங்களுக்கு இடையே எதிரிகளாக மாறினால் பாதிக்கப்படப் போவது எமது சிறுவர் சமுதாயமாகும்.

அதனால் மாணவர்கள் தாங்களே தங்களுடைய வகுப்பு ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் அழைப்பினை மேற்கொண்டு சேவைக்கு வருமாறு பணிவுடன் வேண்டுகோள் விடுக்கலாம். பெற்றோர்களும் அவ்வாறே செய்ய முடியும். 

அத்துடன் தொழிற்சங்க பயங்கரவாதத்தில் இருந்து விடுபட்டு சேவைக்கு வருகை தரும் ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், பழைய மாணவர்கள் இணைந்து வரவேற்கலாம்.

No comments:

Post a Comment