சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வுக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வுக்கு கடிதம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

சீனிக்காக விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு விலையை 25 ரூபாவினால் அதிகரிக்குமாறு சீனி இறக்குமதியாளர்களின் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. சீனி இறக்குதியாளர்கள் 10 பேர் கைச்சாத்திட்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது, தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சீனி 3 ஆயிரம் மெட்ரிக் தொன் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

தற்போது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு விலைக்கு சீனி விற்பனை செய்ய முடியாது. அத்துடன் இறக்குமதியாளர்களிடம் தற்போது 20 ஆயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் குறைவாகவே சீனி இருக்கின்றது.

அத்துடன் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கி இருந்தாலும் வங்கி ஊடாக 6 மாதங்களுக்கு செலுத்தவே கடன் கொடுப்பனவு உத்தரவு பத்திரம் திறக்கப்பட்டிருக்கின்றது.

அதனால் சீனி மெட்ரிக் தொன் அலகு ஒன்றின் விலை 30 டொலரினால் அதிகரிக்கின்றது. அதன் காரணமாக சீனி விலை மேலும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக சீனி இறக்குமதி செய்யாமல் இருப்பதற்கு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.

இதேவேளை, சீனி இறக்குமதிக்கான வரி 25 சதமாக குறிப்பிட்டு நிதி அமைச்சு கடந்த 14ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது. அது 6 மாதங்களுக்கு மாத்திரமாகும்.

நுகர்வோர் நடவடிக்கை தொடர்பான அதிகார சபை கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி விடுத்திருந்த வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம், வெள்ளை சீனி ஒரு கிலாேவின் கட்டுப்பாட்டு விலை 122 ரூபா எனவும் சிவப்பு சீனி 125 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதியாளர்கள் விற்பனை செய்ய வேண்டிய மொத்த சில்லரை விலை 116 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment