தீபக் சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டுபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணியின் தலைவர் கே.எல்.ராகுல் 98 ஓட்டங்கள் விளாசினார்.
இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும், இரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் சுவாரசியமான நிகழ்வு நடந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர், தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து, காதலை வெளிப்படுத்தினார். அப்போது டோனியின் மனைவி சாக்சி மற்றும் உடனிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வாழ்த்து தெரிவித்தனர்.
சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தீபக் சாஹருக்கு கிரிக்கெட் இரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தீபக் சாஹர் இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி, 48 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment