(எம்.மனோசித்ரா)
பன்டோரா ஆவணத்தில் இலங்கை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதோடு, இதனுடன் தொடர்புடைய நிதியை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நிருபமா ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பன்டோரா பத்திரம் மூலம் வெளியிடப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், குறித்த நிதியை நாட்டுக்கு கொண்டு வருவது அத்தியாவசியமானதாகும். காரணம் நாட்டில் தற்போது பாரிய டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் பணத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
எனவே அந்த பணத்தை நாட்டுக்கு கொண்டு வருவதோடு, இது தொடர்பில் துரித விசாரணைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment