ஐ.பி.எல். மற்றும் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகினார் சாம் கர்ரன் - News View

Breaking

Wednesday, October 6, 2021

ஐ.பி.எல். மற்றும் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகினார் சாம் கர்ரன்

முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சாம் கர்ரன் நடப்பு ஐ.பி.எல். மற்றும் வரவிருக்கும் டி-20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஒக்டோபர் 17 ஆரம்பமாகும் டி-20 உலகக் கிண்ணத்தில் அவருக்குப் பதிலாக அவரது சகோதரர் டாம் கர்ரன் இங்கிலாந்து அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடி வரும் கர்ரன், சனிக்கிழமை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் பின்னர் முதுகு வலி இருப்பதாக முறைப்பாடு அளித்தார்.

அதன் பின்னர் அவர் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருக்கு முதுகில் உபாதை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாத நிலையில் டி-20 உலகக் கிண்ணத்துக்கு முகங்கொடுக்கும் இங்கிலாந்து அணிக்கு, சாம் கர்ரனின் விலகலும் பாரிய அடியாகும்.

No comments:

Post a Comment