பாடசாலைகளை நவம்பரில் முழுமையாக திறக்க ஏற்பாடு : அதன் பின்னர் பரீட்சைகளுக்கான நடவடிக்கைகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 9, 2021

பாடசாலைகளை நவம்பரில் முழுமையாக திறக்க ஏற்பாடு : அதன் பின்னர் பரீட்சைகளுக்கான நடவடிக்கைகள்

பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி செயற்பாடுகளை நவம்பர் மாதமளவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, 04 கட்டங்களின் கீழ் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

அதன் பின்னர், மாணவர்களைப் பரீட்சைக்கு தயார்படுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்த காலப்பகுதிகளில், எந்தளவுக்கு பாடத்திட்டங்கள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதென்பது குறித்து கண்டறிவது தொடர்பில் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment