கைதான 16 பேருக்கும் நவம்பர் 16 வரை விளக்கமறியல் : கேகாலை மேல் நீதிமன்றம் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 9, 2021

கைதான 16 பேருக்கும் நவம்பர் 16 வரை விளக்கமறியல் : கேகாலை மேல் நீதிமன்றம் உத்தரவு

மாவனல்லை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 16 பேரையும் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வழக்கு விசாரணை நேற்று கேகாலை மாகாண நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. 

மேற்படி சம்பவங்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களான 16 பேரில் 14 பேர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் நீதிபதி குழாமின் தலைவராக ஜகத் ஏ கஹந்த கமகேவும் ஜயகீத அல்விஸ் மற்றும் இந்திகா காலிங்கவங்ச ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் 23 மற்றும் 26ஆம் திகதிகளுக்கிடையில் மாவனல்லை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் மேற்படி சந்தேக நபர்கள் மாவனெல்லை, கம்பளை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மாவனெல்லை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கு கேகாலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

புலத்கொஹுபிட்டிய குறூப் நிருபர்

No comments:

Post a Comment