ஹிஷாலினி மரண வழக்கில் ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 1, 2021

ஹிஷாலினி மரண வழக்கில் ரிஷாட் பதியுதீனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் பணி புரிந்த 16 வயது டயகம சிறுமி ஹிஷாலினி ஜூட் குமார் எரிகாயங்களுடன் மரணமடைந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் குறித்த உத்தரவை விடுத்துள்ளார்.

குறித்த வழக்கில், ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனையியின் தந்தை, மனைவியின் சகோதரர், சிறுமியை அழைத்து வந்த தரகருடன், 5ஆவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ளதோடு, ஏனைய சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு எதிர்வரும் 14ஆம் திகதி வரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடிப்பதற்கான உத்தரவை நீதவான் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment