மற்றுமொரு 608,000 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இலங்கை வந்தடைந்தன - News View

Breaking

Tuesday, October 19, 2021

மற்றுமொரு 608,000 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இலங்கை வந்தடைந்தன

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 608,000 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இன்று (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கியதைத் தொடர்ந்து, 3ஆவது டோஸ் தடுப்பூசியாக Pfizer தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு அமைய, அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் 50 இலட்சம் Pfizer தடுப்பூசி டோஸ்களை கொள்வனவுக்காக கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்வனவுக்காக கோரப்பட்டுள்ள Pfizer தடுப்பூசி டோஸ்களில் இம்மாதம் ஆரம்பத்தில் ஒரு தொகை வந்தடைந்திருந்ததோடு, நேற்றையதினம் (18) 608,000 டோஸ் Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்திருந்தன.

இதேவேளை, இதுவரை அமெரிக்காவினால் 2.4 மில்லியன் டோஸ் Pfizer தடுப்பூசி டோஸ்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

53 பெட்டிகளில் பொதி செய்யப்பட்ட, 1,818 கி.கி. எடை கொண்ட இத்தடுப்பூசி தொகுதி, இன்று (19) அதிகாலை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கட்டாரின் டோஹாவிற்கும், அதனைத் தொடர்ந்து அங்கிருந்து இலங்கையை வந்தடைந்துள்ளன.

No comments:

Post a Comment