நேபாளத்தில் சோகம் - பஸ் கவிழ்ந்ததில் 32 பேர் பலி - News View

Breaking

Wednesday, October 13, 2021

நேபாளத்தில் சோகம் - பஸ் கவிழ்ந்ததில் 32 பேர் பலி

நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் பஸ் ஒன்று பள்ளத் தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ்சானது நேபாளம், முகு மாவட்டத்தின் மலைப்பாதை வழியாக சென்றபோதே, வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 22 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த நேபாள ராணுவத்தினர் ஹெலிகொப்டரில் வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

படுகாயம் அடைந்துள்ள பலரது நிலைமை கவலை அளிப்பதாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது.

விசாரணையில், பல்வேறு பகுதிகளில் இருந்து தசரா பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் இந்த பஸ்சில் பயணித்துள்ளனர் என தெரியவந்தது.

விபத்திற்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை. எனினும் சில அறிக்கைகள் பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நேரிட்டாக குறிப்பிடுகின்றது.

நேபாளத்தில் வீதி விபத்துகள் அசாதாரணமானது அல்ல, மோசமான வீதிகள் அல்லது மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்களால் அங்கு அடிக்கடி இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுகின்றது.

No comments:

Post a Comment