அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் 29 வது ஆண்டு தேசிய பாடசாலை தின விழா - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் 29 வது ஆண்டு தேசிய பாடசாலை தின விழா

நூருள் ஹுதா உமர்

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு 29 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரி அதிபர் ஏ.பி. முஜின் தலைமையில் சர்வதேச ஆசிரியர் தினமான கடந்த புதன்கிழமை (06) கல்லூரியின் "அதாஉல்லா கேட்போர் மண்டபத்தில்" தேசிய பாடசாலை தின விழா கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா கலந்து கொண்டதுடன் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள்,
அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் பலரும் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக கலந்து சிறப்பித்தனர்.

மேலும், அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளராக பல வருடங்கள் திறமையாக கடமையாற்றி ஓய்வுபெற்ற ஏ.எல்.எம். காசிம் இந்நிகழ்வில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் 2020ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண பரிட்சையில் அனைத்துப் பாடங்களிலும் விசேட பெறுபேறு பெற்ற மாணவர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment