ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்கு JVP யும், அனுரகுமாரவும் பொறுப்புக்கூற வேண்டும் : இலங்கையை இஸ்லாமிய இராஜ்ஜியமாக மாற்றியமைக்க செயற்படுவதை தவிர்க்கவும் - பொதுபலசேனா - News View

Breaking

Saturday, October 2, 2021

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்கு JVP யும், அனுரகுமாரவும் பொறுப்புக்கூற வேண்டும் : இலங்கையை இஸ்லாமிய இராஜ்ஜியமாக மாற்றியமைக்க செயற்படுவதை தவிர்க்கவும் - பொதுபலசேனா

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியும், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவும் ஒரு வகையில் பொறுப்பு கூற வேண்டும். அடிப்படைவாத கொள்கையினால் ஈர்க்கப்பட்டவர்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி அரசியல் ரீதியில் பாதுகாப்பு வழங்கியுள்ளது. இலங்கையை இஸ்லாமிய இராஜ்ஜியமாக மாற்றியமைக்கும் ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்படுவதை மக்கள் விடுதலை முன்னணி தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டி பொதுபலசேனா அமைப்பு மக்கள் விடுதலை முன்னணிக்கு பகிரங்க கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பல்லாயிரக்கணக்கான இளம் தலைமுறையினரை கொன்று அதனுடாக அரசியலுக்கு பிரவேசித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நாட்டில் மீண்டும் இனவாத முரன்பாடுகள் தலைதூக்குவதற்கு விரும்பவில்லை. என்று குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுப் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதை பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் பலமுறை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

மக்கள் விடுதலை முன்னயின் வரலாற்றை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இவர்கள் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். இப்ராஹிமிற்கு அரசியல் ரீதியில் ஆதரவு வழங்கி அடிப்படைவாதத்தை மக்கள் விடுதலை முன்னணி பாதுகாத்தது.

மக்கள் விடுதலை முன்னணியுடன் இப்ராஹிம் அவரது குடும்பத்தார் மாத்திரம் தொடர்புகொள்ளவில்லை என்பதை பொதுபலசேனா அமைப்பு ஆதாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணின் ஆதரவுடன் தோற்றம் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியில் அடிப்படைவாத கொள்கையால் ஈர்க்கப்பட்ட பலர் உள்ளனர்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று மூன்று மாதத்திற்கு பிறகு மக்கள் விடுதலை முன்னணி இஹ்வான் முஸ்லிம் தரப்பினர், நல்லாட்சிக்கான தேசிய அமைப்பு மற்றும் ஜமாஅதே இஸ்லாமி மற்றும் 29 முஸ்லிம் அமைப்புக்களை ஒன்றினைத்து 'தேசிய மக்கள் சக்தி' உருவாக்கப்பட்டது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஜமாஅதே இஸ்லாமி அமைப்பை 'முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாக்கும் ஒரு செயற்திட்டம்' என்றே கருதுகிறது. இவ்வமைப்பினரிடம் பெருந்தொகையிலான ஆயுதங்கள் இருப்பதும், முஸ்லிம் இளைஞர்களுக்கு அடிப்படைவாத போதனைகளை வழங்கியுள்ளதையும் அறிய முடிந்துள்ளது.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் '2015 ஏப்ரல் 15 ஆம் திகதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் அனுசரனையுடன் காத்தான்குடியில் முஸ்லிம் நூதனசாலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நூதனசாலையின் நிர்மானிப்புக்கள் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு விரோதமானது என நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி குறிப்பிட்டதாக குறிப்பிடப்பட்டள்ளது.

2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னிலையான அரசியல் கட்சிகளுக்கு பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்ட தேசிய தௌஹீத் ஜமாஅதேவினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் அப்துல் ரஹ்மான் இணக்கம் தெரிவித்தார்.

இலங்கையை இஸ்லாமிய இராஜ்ஜியமாக மாற்றும் ஒப்பந்தத்தின் பிரகாரம் பௌத்த மத தலைவர்களுக்கு எதிராக கருத்துரைப்பதை முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment