ஐசிசி ரி 20 உலகக்கிண்ண போட்டிகள் ஓமான், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ளன, குறித்த கிரிக்கெட் தொடருக்கான போட்டி நடுவர்கள் மற்றும் மத்தியஸ்தர்கள் ஆகியோருடைய விபரத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இலங்கையர்களான குமார் தர்மசேன, ரஞ்சன் மடுகல்ல, இந்தியர்களான நிதின் மேனன் பாகிஸ்தானில் அலீம் தார் உள்ளிட்ட பலர் இந்த குழாமில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
போட்டி மத்தியஸ்தர்கள்
டேவிட் பூன்
ஜெஃப் க்ரோ
ரஞ்சன் மடுகல்ல
ஜவகல் ஸ்ரீநாத்
போட்டி நடுவர்கள்
கிறிஸ் பிரவுன், அலீம் டார், குமார் தர்மசேன, மரைஸ் எராஸ்மஸ், கிறிஸ் காஃபனி, மைக்கேல் காஃப், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்ரோ, நிதின் மேனன், அஹ்சன் ராசா, பால் ரைஃபெல், லாங்டன் ரூஸர், ராட் டக்கர், ஜோயல் வில்சன், பால் வில்சன்.
ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ரி20 உலகக்கிண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment