(ஜெ.அனோஜன்)
2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்தின் தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் நேற்றையதினம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், சூப்பர் 12 சுற்றுக்கான ஆட்டங்கள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.
முதல் சுற்றின் கடைசி நாள் ஆட்டம் வரை சூப்பர் 12 சுற்றுக்கான இறுதி குழுக்கள் தீர்மானிக்கப்படவில்லை.
நேற்யை ஆட்டத்தில் நமிபியா அயர்லாந்தை வென்றதுடன், தகுதிச் சுற்றின் குழு 'ஏ' யில் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
அதேநேரம் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் குழு 'பி' யில் முதலிடம் பிடித்த ஸ்கொட்லாந்துடன் இணைந்து சூப்பர் 12 சுற்றில் குழு '2' இல் நுழைந்தது.
'ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்த இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் குழு 'பி' தகுதிச் சுற்று ஆட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்த பங்களாதேஷுடன் இணைந்து சூப்பர் 12 சுற்றில் குழு '1' இல் நுழைந்தது.
இந்நிலையில் இன்று ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியுடன் 2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்துக்கான மிகச் சிறந்த போர் ஆரம்பிக்கும்.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மாத்திரம் அரையிறுதிக்கு முன்னேறும்.
புள்ளி வழங்கும் அமைப்பு
முதல் சுற்றில் இருந்ததைப் போல, பின்வரும் புள்ளிகள் அமைப்பு சூப்பர் 12 சுற்றுக்கும் பொருந்தும்
வெற்றி - இரண்டு புள்ளிகள்
சமனிலை, முடிவு இல்லை / கைவிடப்பட்டது: ஒரு புள்ளி
தோல்வி : பூஜ்ஜிய புள்ளிகள்
பரிசு
சூப்பர் 12 சுற்று அணிகள் ஒவ்வொன்றும் 70,000 அமெரிக்க டொலர்களை பெறும். அதே சமயம் குழுவில் ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணி 40,000 அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கும்.
அணிகளும் போட்டிகளும்
இங்கிலாந்து - ஐசிசி டி20 தரவரிசை: 1
போட்டி
23 ஒக் – மேற்கிந்தியத்தீவுகள்
27 ஒக் – பங்களாதேஷ்
30 ஒக் – அவுஸ்திரேலியா
01 நவ – இலங்கை
06 நவ – தென்னாபிரிக்கா
அவுஸ்திரேலியா - ஐசிசி டி20 தரவரிசை: 7
போட்டி
23 ஒக் – தென்னாபிரிக்கா
28 ஒக் – இலங்கை
30 ஒக் – இங்கிலாந்து
04 நவ – பங்களாதேஷ்
06 நவ – மேற்கிந்தியத்தீவுகள்
தென்னாபிரிக்கா - ஐசிசி டி20 தரவரிசை: 5
போட்டி
23 ஒக் – அவுஸ்திரேலியா
26 ஒக் – மேற்கிந்தியத்திவுக்ள
30 ஒக் – இலங்கை
02 நவ – பங்களாதேஷ்
06 நவ – இங்கிலாந்து
மேற்கிந்தியத்தீவுகள் - ஐசிசி டி20 தரவரிசை: 9
போட்டி
23 ஒக் – இங்கிலாந்து
26 ஒக் – தென்னாபிரிக்கா
29 ஒக் – பங்களாதேஷ்
04 நவ – இலங்கை
06 நவ – அவுஸ்திரேலியா
இலங்கை - ஐசிசி டி20 தரவரிசை: 10
போட்டி
24 ஒக் - பங்களாதேஷ்
28 ஒக் – அவுஸ்திரேலியா
30 ஒக் – தென்னாபிரிக்கா
01 நவ – இங்கிலாந்து
04 நவ – மேற்கிந்தியத்தீவுகள்
பங்களாதேஷ் - ஐசிசி டி20 தரவரிசை: 6
போட்டி
24 ஒக் – இலங்கை
27 ஒக் – இங்கிலாந்து
29 ஒக் – மேற்கிந்தியத்தீவுகள்
02 நவ – தென்னாபிரிக்கா
04 நவ – அவுஸ்திரேலியா
இந்தியா - ஐசிசி டி20 தரவரிசை: 2
போட்டி
24 ஒக் – பாகிஸ்தான்
31 ஒக் – நியூஸிலாந்து
03 நவ – ஆப்கானிஸ்தான்
05 நவ – ஸ்கொட்லாந்து
08 நவ – நமீபியா
பாகிஸ்தான் - ஐசிசி டி20 தரவரிசை: 3
போட்டி
24 ஒக் – இந்தியா
26 ஒக் – நியூஸிலாந்து
29 ஒக் – ஆப்கானிஸ்தான்
02 நவ – நமீபியா
07 நவ – ஸ்கொட்லாந்து
நியூஸிலாந்து - ஐசிசி டி20 தரவரிசை: 4
போட்டி
26 ஒக் – பாகிஸ்தான்
31 ஒக் – இந்தியா
03 நவ – ஸ்கொட்லாந்து
05 நவ – நமீபியா
07 நவ – ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் - ஐசிசி டி20 தரவரிசை: 8
போட்டி
25 ஒக் – ஸ்கொட்லாந்து
29 ஒக் – பாகிஸ்தான்
31 ஒக் – நமீபியா
03 நவ – இந்தியா
07 நவ – நியூஸிலாந்து
ஸ்கொட்லாந்து - ஐசிசி டி20 தரவரிசை: 14
போட்டி
26 ஒக் – ஆப்கானிஸ்தான்
28 ஒக்– நமீபியா
03 நவ – நியூஸிலாந்து
05 நவ – இந்தியா
08 நவ – பாகிஸ்தான்
நமீபியா - ஐசிசி டி20 தரவரிசை: 19
போட்டி
27 ஒக் – ஸ்கொட்லாந்து
30 ஒக்– ஆப்கானிஸ்தான்
02 நவ – பாகிஸ்தான்
05 நவ – நியூஸிலாந்து
08 நவ – இந்தியா
No comments:
Post a Comment