உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியில் மேலதிகமாக 5 வீரர்கள் - News View

About Us

Add+Banner

Friday, October 1, 2021

demo-image

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியில் மேலதிகமாக 5 வீரர்கள்

.com/img/a/
(எம்.எம்.சில்வெஸ்டர்)

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியில் மேலதிக வீரர்களாக 5 வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் ‍ தெரிவித்துள்ளது.

பெத்தும் நிஸ்ஸங்க, மினோத் பானுக்க, அஷேன் பண்டார, லக்சான் சந்தகன் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய வீரர்களே மேலதிக வீரர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள வீரர்களாவர்.

இதற்கான அனுமதியை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாமில் பெயரிடப்பட்டிருந்த லஹிரு மதுஷங்க காயத்தால் அவதிப்பட்டு வருவதால், எதிர்வரும் 3 ஆம் திகதி ஓமான் நோக்கி பயணமாகும் இலங்கை கிரிக்கெட் அணியுடன் சேர்ந்து பயணிக்கமாட்டார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *