ஓமான் அணியை 19 ஓட்டங்களால் வென்றது இலங்கை (VIDEO) - News View

Breaking

Thursday, October 7, 2021

ஓமான் அணியை 19 ஓட்டங்களால் வென்றது இலங்கை (VIDEO)

சுற்றுலா இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.

அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மூவரில் பெத்தும் நிஸ்ஸங்க மாத்திரம் 8 ஓட்டங்களை பெற, விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமால் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து சென்றனர்.

இலங்கை அணி சார்பில் அவிஷ்க பெனாண்டோ ஆட்டமிழக்காது, 59 பந்துகளில் 83 ஓட்டங்களை பெற்றார்.

அணியின் தலைவர் தசுன் ஷானக்க ஆட்டமிழக்காது 24 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்றார். பானுக ராஜபக்‌ஷ 15 (21) ஓட்டங்கள்.

பந்துவீச்சில் பயாஸ் பட் 2 விக்கெட்டுகளையும், கலீமுல்லாஹ் மற்றும் காவர் அலி தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பறினர்.

பதிலுக்கு 163 ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காத போதிலும், நடு வரிசை வீரர்கள் வெற்றிக்கா போராடி தோற்றனர்.

ஓமான் அணி சார்பில் நசீம் குஷி 22 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றார். மொஹமட் நதீம் 32 (32), அயான் கான் 23 (25) சந்தீப் கௌத் 17 (13) ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, நுவன் பிரதீப், சமிக கருணாரத்ன தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இரு அணிகளுக்குமிடையிலான 2ஆவது போட்டி நாளை மறுதினம் (09) இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment