மாகாண எல்லையை மீறிய 132 வாகனங்கள், 274 நபர்கள் திருப்பியனுப்பப்பட்டனர் - News View

Breaking

Saturday, October 2, 2021

மாகாண எல்லையை மீறிய 132 வாகனங்கள், 274 நபர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மாகாண எல்லை பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணித்த 132 வாகனங்களை பொலிஸார் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அத்துடன் பயணக்கட்டுப்பாட்டை மீறி மாகாண எல்லையை மீறிய 274 பேர் திருப்பியனுப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச் சாவடிகளில் மேற்கொண்ட சோதனையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தலைமையகம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய
வாகனங்கள் 732
நபர்கள் 1,004

மேல் மாகாணத்திலிருந்து நுழைந்த
வாகனங்கள் 956
நபர்கள் 1,487

உரிய அனுமதியின்றி திருப்பியனுப்பப்பட்ட
வாகனங்கள் 132
நபர்கள் 274

நேற்று (01) முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும், மாகாணங்களிடையேயான பயணக் கட்டுப்பாடு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென, கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment