13 ஐ நடைமுறைப்படுத்திய பின் தேர்தலை நடத்துங்கள் : இந்திய அழுத்தம் குறித்து செல்வம் MP கருத்து - News View

About Us

About Us

Breaking

Thursday, October 14, 2021

13 ஐ நடைமுறைப்படுத்திய பின் தேர்தலை நடத்துங்கள் : இந்திய அழுத்தம் குறித்து செல்வம் MP கருத்து

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதே சிறந்ததாக அமையும் என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்தியா இவ்விடயத்தில் முனைப்புடன் செயல்பட வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். 

மன்னாரில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாறிமாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கிறார்கள் அரசியல் சாசனம் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர்தான் தேர்தல் இடம்பெறும் என கூறுகிறார்கள். அடுத்த வருடம் தேர்தலை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள். புதிய தேர்தல் முறையில்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றார்கள்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எங்களுடைய கோரிக்கை பிரதானமானதாக உள்ளது. அதே நேரத்தில் 13 வது திருத்தச் சட்டத்தில் கூறப்படுகின்ற அனைத்து விடயங்களையும் நடை முறைப்படுத்துகின்ற ஒரு வழியை கையாளுகின்ற முறைமையை இந்தியா செய்ய வைக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை.

அதிகாரம் இல்லாத மாகாண சபையை நாங்கள் ஏற்றுக் கொண்டு அதனூடாக எங்களது நிலங்களை பாதுகாப்பது மற்றும் எமது பிரச்சனைகளை கையாள்வது என்பது மிக ஒரு கேலித்தனமான விடயமாக நாங்கள் பார்க்கின்றோம்.

எனவே 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பது தான் சிறந்ததாக அமையும். இந்தியா இவ்விடயத்தில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment