மாவட்ட ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வீதம் வெளியீடு : Z-Score வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 21, 2021

மாவட்ட ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்கள் எண்ணிக்கை வீதம் வெளியீடு : Z-Score வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியீடு

கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர் தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளுக்கமைவாக, பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் மாவட்ட ரீதியிலான மாணவர் தொகையின் வீதங்கள் இன்றைய (21) தினகரன் பத்திரிகையில் (மற்றும் Dailynews, Dinamina பத்திரிகைகளிலும்) வெளியாகியுள்ளன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிவிப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலான வெட்டுப்புள்ளிகள் (Z-Score) அடுத்த மாதமளவில் வெளியிடப்படுமென, பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

இப்பரீட்சைகள் 2020 க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் கடந்த வருடம் ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை இடம்பெற்றது.

அதன் பெறுபேறுகள் கடந்த மே 04ஆம் திகதி இணையத்தில் வெளியாகியிருந்தது.

பரீட்சார்த்திகள்
நாடு முழுவதிலுமுள்ள 2,648 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைகளுக்கு, 301,771 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பாடத்திட்டம் : 277,625 பேர்
பழைய பாடத்திட்டம் : 24,146 பேர்

64.39% ஆனோர் பல்கலைக்கழக தகுதி
2020 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 194,297 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

புதிய பாடத்திட்டம்: 178,337 பேர்
பழைய பாடத்திட்டம்: 15,960 பேர்

அதற்கமைய, பரீட்சைக்கு தோற்றிய 64.39% ஆன மாணவர்கள் பல்கலைக்கு தகுதி பெற்றிருந்தனர்.

பெறுபேறுகள் இடைநிறுத்தம்
இதேவேளை 86 மாணவர்களின் பெறுபேறுகள் வெளியிடப்படாமல் இடைநிறுத்தி வைக்கப்பட்டது.

புதிய பாடத்திட்டம்: 72 பேர்
பழைய பாடத்திட்டம்: 14 பேர்

No comments:

Post a Comment