பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் உள்ளிட்ட 4 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 21, 2021

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் உள்ளிட்ட 4 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, அனைத்து பல்கலை மாணவர் ஒன்றிய அழைப்பாளர் உள்ளிட்ட நால்வருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 05ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் தலைவர் அமில சந்தீப மற்றும் கோசலா ஹங்சமாலி, முன்னிலை சோசலிச கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமீர கொஸ்வத்த ஆகியோருக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 03ஆம் திகதி, பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலை சட்டமூலத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மஹரகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை காயப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment