UK பயணத்தடை சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 18, 2021

UK பயணத்தடை சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், இங்கிலாந்தின் பயண சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படுவதாக, இலண்டனிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளுக்கு இத்தடை நீக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 அச்சுறுத்தலை எதிர்கொண்டு இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் இவ்வாறு சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்ட துருக்கி, பாகிஸ்தான், மாலைதீவு, எகிப்து, ஓமான், பங்களாதேஷ், கென்யா ஆகிய 8 நாடுகள் இவ்வாறு அப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, குறிப்பிட்ட நாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் பிரிட்டனுக்கு வரும் போது, ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சமிக்ஞையின் அடிப்படையில், ஐக்கிய இராச்சியத்தில் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வண்ணங்களின் அடிப்படையில் பயண பட்டியல் நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment