விமான நிலைய PCR ஆய்வக பணி ஆரம்பம் : ஜப்பானிலிருந்து வந்தவருக்கு முதல் சோதனை - News View

About Us

About Us

Breaking

Sunday, September 26, 2021

விமான நிலைய PCR ஆய்வக பணி ஆரம்பம் : ஜப்பானிலிருந்து வந்தவருக்கு முதல் சோதனை

கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட புதிய பி.சி.ஆர் ஆய்வகம், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கான சோதனை நடவடிக்கையை ஆரம்பித்தது.

அதன்படி, ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட முதல் இலங்கையர் ஜப்பானிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை வந்தவரென தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதல் வெளிநாட்டவர் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.

அவர் நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தினூடாக நாட்டுக்கு வருகை தந்தார். 

அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தின் புதிய பி.சி.ஆர் ஆய்வகத்தில் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

No comments:

Post a Comment