மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தயாகம் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பி.சி.ஆர்.சோதனைகள் நடத்துவதற்கான செலவுகளை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஏற்றுள்ளது.
அதன்படி கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பி.சி.ஆர். நிலையங்களில் அவர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்த சலுகையினை தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பி.சி.ஆர்.சோதனை நிலையங்கள் இன்று முதல் செயல்பாட்டில் உள்ளன.
பொதுவாக ஒரு பி.சி.ஆர். சோதனைக்கு 40 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும். சோதனை முடிவுகள் சுமார் 2 - 3 மணித்தியாலங்களுக்குள் வெளியாகும்.
இதன்போது எவருக்கேனும் தொற்று உறுதியானால், உரிய பொதுச் சுகாதார அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment