கடந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 236,053 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 2020 தேர்வின் முடிவுகள் பாராட்டுக்குரியது. தேர்வில் தேர்ச்சி பெற்ற குழுவில் 231,458 பாடசாலை விண்ணப்பதாரர்கள் உள்ளனர் என்றும், அழகியல் பாடங்களின் முடிவுகளும் வெளியிடப்படும் போது, இந்த எண்ணிக்கையில் மேலும் மாற்றத்தை காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சாதாரண தரப் பரீட்சை என்பது ஒரு போட்டி அல்ல, மாணவர்களின் முயற்சிகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் கேள்விகள் இருந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெறலாம்.
அதன்படி, 011 2784208, 011 2784537, 011 3140314 அல்லது ஹொட்லைன் எண் 1911 ஐ அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெறலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment