'Mu' என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டை கண்காணிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 1, 2021

'Mu' என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டை கண்காணிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம்

கொலம்பியாவில் ஜனவரி மாதம் அடையாளம் காணப்பட்ட 'Mu' எனப்படும் புதிய கொரோனா வைரஸ் வகையை கண்காணிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

'Mu' என்பதன் பதம் அறிவியல் ரீதியாக பி.1.621 என அறியப்படுகிறது, இந்த மாறுபாடு தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பின் அபாயத்தைக் குறிக்கும் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறி உள்ளது.

மேலும் அதை நன்கு புரிந்து கொள்ள மேலதிக ஆய்வுகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது.

தொற்று விகிதங்கள் உலகளவில் மீண்டும் அதிகரித்து வருகின்றமையினால் புதிய வைரஸ் பிறழ்வுகள் தோன்றுவதில் அதிகளவான கவலை கொண்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

தற்போது நான்கு கொவிட்-19 வைரஸ் வகைகளை உலக சுகாதார ஸ்தாபனம் அடையாளம் கண்டுள்ளது, இதில் 193 நாடுகளில் பரவியுள்ள ஆல்பா மற்றும் 170 நாடுகளில் பரவியுள்ள டெல்டா வகைகளும் அடங்கும்.

No comments:

Post a Comment