தலிபான்களால் இலங்கையிலும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் வலுப்பெறும் : அரசாங்கம் தப்லிக் ஜமாஅத்தை தடை செய்ய வேண்டும் என்கிறார் ஞானசார தேரர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 1, 2021

தலிபான்களால் இலங்கையிலும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் வலுப்பெறும் : அரசாங்கம் தப்லிக் ஜமாஅத்தை தடை செய்ய வேண்டும் என்கிறார் ஞானசார தேரர்

(இராஜதுரை ஹஷான்)

ஆப்கானிஸ்தானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள தலிபான் அமைப்பினால் இலங்கையில் 70 வீதம் ஆதிக்கம் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படையாத அமைப்புக்கள் வலுப்பெறும். தப்லிக் ஜமாஅத் அமைப்பை அரசாங்கம் தடை செய்வதுடன், இஸ்லாமிய அடிப்படையாத கொள்கையுடைய அமைப்புக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் முற்றாக இல்லாமல் போயுள்ளது என்று ஒருபோதும் கருத கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தலிபான் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கபட்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையிலும் உள்ளன.

குறிப்பாக தப்லிக் ஜமாஅத் அமைப்பை குறிப்பிட வேண்டும். இந்த அமைப்பை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும்.அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையுடைய அமைப்புக்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பகிரங்கமாக செயற்படுகிறது என்று பலமுறை ஆதாரத்துடன் வெளிப்படுத்தினோம்.

எமது கருத்தை முஸ்லிம் சமூகத் தலைவர்கள் இனவாத கோணத்தில் கருதி எம்மை இனவாதிகள் என்றும், முஸ்லிம் சமூக விரோதிகள் என்றும் சித்தரித்து அடிப்படைவாதிகளை பாதுகாத்தார்கள். விளைவு ஏப்ரல் 21 குணடுத் தாக்குதலுடன் வெளியானது.

மதத்தின் பெயரினாலும், தவறான போதனைகளினாலும் பயங்கரவாதிகளினால் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.இதனால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அன்று பாதிக்கப்பட்டார்கள்.இன்றும் அதன் விளைவு தொடர்கிறது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையில் இல்லை என்று கருத முடியாது. ஆகவே அரசாங்கம் ஆப்கானிஸ்தான் விவகாரத்தை கருத்திற் கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment