ஹோட்டலில் அனுமதி மறுப்பு : வீதியோர உணவகத்தில் சாப்பிட்ட பிரேசில் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 22, 2021

ஹோட்டலில் அனுமதி மறுப்பு : வீதியோர உணவகத்தில் சாப்பிட்ட பிரேசில் ஜனாதிபதி

ஜெய்ர் போல்சனரோ வீதியோரத்தில் நின்று பீட்சா சாப்பிடும் புகைப்படத்தை அவரது சக அமைச்சர்கள் டுவிட்டரில் பகிர்ந்தனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் சாதாரண காய்ச்சல் போன்றதே என கூறிவரும் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமுல்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். 

அதேபோல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அவர் மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. சபை பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் தனது சக அமைச்சர்களுடன் சேர்ந்து நியூயோர்க் நகரில் உள்ள ஹோட்டலுக்கு இரவு உணவு அருந்த சென்றார்.

ஆனால் அந்த ஹோட்டலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே உணவு அருந்த முடியும் என்பதால் ஜெய்ர் போல்சனரோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. 

இதைத் தொடர்ந்து, ஜெய்ர் போல்சனரோ தனது சக அமைச்சர்களுடன் சேர்ந்து வீதியோரம் உள்ள ஒரு உணவகத்தில் ‘பீட்சா’ வாங்கி சாப்பிட்டார்.

ஜெய்ர் போல்சனரோ வீதியோரத்தில் நின்று பீட்சா சாப்பிடும் புகைப்படத்தை அவரது சக அமைச்சர்கள் டுவிட்டரில் பகிர்ந்தனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment