இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கு கொரோனா - News View

Breaking

Monday, September 6, 2021

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கு கொரோனா

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் உட்பட அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

விரைவான அன்டிஜன் சோதனையின்போதே ரவி சாஸ்திரி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

செப்டம்பர் 10 ஆம் திகதி தொடங்கும் இறுதி டெஸ்ட் போட்டிக்காக அணியின் ஏனைய வீரர்கள் அடுத்த வாரம் மான்செஸ்டருக்கு செல்லவுள்ளனர்.

இந்நிலையில் ரவி சாஸ்திரியும், அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய களத்தடுப்பு பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் மற்றும் பிசியோ நிதின் படேல் ஆகியோர் லண்டனில் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள்.

சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடத்தப்பட்ட இரு விரைவான அன்டிஜன் சோதனைகளில் அணியின் ஏனைய உறுப்பினர்களும் வீரர்களும் கொரோனா தொற்றுக்கு எதிர்மறையான முடிவினை வெளிப்படுத்தியுள்னர். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment