மாத்தளை வரக்காமுற ஹெல்பிங் ஹேண்ட் சமூக சேவை அமைப்பினால் இலவச பிரேதப் பெட்டிகள், வாகன சேவைகள் - News View

Breaking

Monday, September 6, 2021

மாத்தளை வரக்காமுற ஹெல்பிங் ஹேண்ட் சமூக சேவை அமைப்பினால் இலவச பிரேதப் பெட்டிகள், வாகன சேவைகள்

மாத்தளை வரக்காமுற ஹெல்பிங் ஹேண்ட் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தளை ஆதார வைத்தியசாலையில் மரணிக்கும் கொவிட்-19 நோயாளர்களின் பிரேதங்களை அடக்கம் செய்வதற்கு தேவையான பிரேதப் பெட்டிகள் மற்றும் பிரேதங்களை குறித்த இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக இலவச வாகன சேவையையும் நடத்தி வருகின்றனர்.

கொவிட்-19 தொற்று காரணமாக வைத்தியசாலை மற்றும் வீடுகளில் மரணிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய சமூகங்களில் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவசமாக இந்த பிரேதப் பெட்டிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதுடன் குறித்த இடங்களுக்கு பிரதேசங்களை வாகனத்தின் மூலம் எடுத்துச் செல்லும் சேவை ஒன்றும் தினமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

24 மணித்தியாலமும் இயங்கக்கூடிய இந்த சேவைகளை பெற்றுக் கொள்ள 077849494944, 0771717384 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மேற்படி அமைப்பின் உறுப்பினரும், பிரதேச சபைத் தலைவருமான ஏ.ஜெ.ஏ. நிசார் தெரிவித்தார்.

அத்துடன் கொவிட்-19 நோயால் மரணிக்கும் பிரேதங்களை வைப்பதற்காக சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டி ஒன்றும் அன்பளிப்பாகவும் மேற்படி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த குளிரூட்டியில் 20 பிரேதங்கள் வைப்பதற்கான வசதி காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாத்தளை சுழற்சி நிருபர்

No comments:

Post a Comment