அரசியல்வாதிகளை எவ்வாறு மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க முடியும் - எரான் விக்ரமரத்ன - News View

Breaking

Saturday, September 11, 2021

அரசியல்வாதிகளை எவ்வாறு மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க முடியும் - எரான் விக்ரமரத்ன

நா.தனுஜா

மத்திய வங்கியானது அரசிடமிருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதே அதன் கொள்கைகளில் முதன்மையானதாகும். ஆனால் இப்போது மத்திய வங்கி அரச திணைக்களமொன்றைப்போல மாறியிருக்கின்றது என்று பலரும் விமர்சிக்கின்றார்கள்.

அவ்வாறிருக்கையில் அரசியல்வாதியொருவரை, அதிலும் அமைச்சுப் பதவி வகித்த ஒருவரை உடனடியாகவே மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதென்பது அக்கட்டமைப்பின் சுயாதீனத் தன்மையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்பிலிருந்து பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷ்மன் விலகவுள்ள நிலையில், அப்பதவிக்கு தற்போதைய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவிருக்கின்றார். இது குறித்து தனது அபிப்பிராயத்தை வெளியிடுகையிலேயே எரான் விக்ரமரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad